முள் சீத்தாப்பழத்தில் இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா... ஆனா யாரெல்லாம் சாப்பிடவே கூடாது...


முள் சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள் குறித்தும், அதனை சாப்பிடுவதன் மூலம், நமது உடலுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்... soursop என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முள் சீத்தாப்பழம், பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரி பழம் போன்று உள்ளது. இது ஆப்பிளின் ஒரு வகை என்றும் அழைக்கப்படுகிறது. பழத்தின் வெளிப்புறத்தில், முட்கள் அதிகளவில் உள்ளன.

இந்த பழத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆக உள்ளபோதிலும், இதன் சுவை, உலகின் அனைத்துப் பகுதி மக்களாலும் விரும்பத்தக்கதாக உள்ளது. முள் சீத்தாப்பழத்தின் சுவை ஸ்ட்ராபெர்ரி, ,பைன் ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பழங்களின் கலவையாக உள்ளது.

​முள் சீதாப்பழம்

முள் சீத்தாப்பழம், சீத்தாப்பழம் குடும்பத்தை சேர்ந்தது ஆகும். Annona muricata என்பது இதன் தாவரவியல் பெயர் ஆகும். இந்த தாவரம், அகன்ற இலைகளை கொண்டதாக உள்ளது.

இது உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

​முள் சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

1 கப் ( 225 கிராம்) அளவு முள் சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்களாக, அமெரிக்க

உணவுத்துறை தெரிவித்து உள்ளதாவது....

கலோரிகள் : 148

கொழுப்பு : 0.7 கிராம்

சோடியம் : 31.75 மில்லிகிராம்

கார்போஹைட்ரேட்ஸ் : 37.9 கிராம்

நார்ச்சத்து : 7.4 கிராம்

சர்க்கரை : 30.5 கிராம்

புரதம் : 2.3 கிராம்

வைட்டமின் சி : 46.4 மில்லிகிராம்

பொட்டாசியம் : 626 மில்லிகிராம்.

கார்போஹைட்ரேட்ஸ்

ஒரு கப் முள் சீத்தாப்பழம் கூழில், 38 கிராம் கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது. முள் சீத்தாபழத்தில் இயற்கையிலேயே தருவிக்கப்பட்ட சர்க்கரைகள் உள்ளன.

இதில் 7 கிராம் அளவிற்கு நார்ச்சத்து உள்ளது ( இது நமக்கு தினமும் தேவையான நார்ச்சத்தின் நான்கில் ஒரு பகுதி ஆகும்). முள் சீத்தாப்பழத்தில், கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவான அளவில் உள்ளது.

முள் சீத்தாப்பழத்தில், குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இது ஒரு கிராம் அளவை விட மிக குறைந்த அளவில் உள்ளது.

​புரோட்டீன்

மற்ற பழங்களை ஒப்பிடும்போது, முள் சீத்தாபூ, குறைந்த அளவிலேயே புரோட்டீன் உள்ளது. ஒரு கப் முள் சீத்தாப்பழம் கூழில், 2.3 கிராம் அளவிலேயே புரோட்டீன் உள்ளது. உடலுக்கு அதிக புரோட்டீன் தேவைப்படுபவர்கள், சால்மோன் மீன், லீன் இறைச்சி, பருப்பு வகைகள் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்

முள் சீத்தாப்பழத்தில் அதிகளவில் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்கள் உள்ளன. ஒரு கப் முள் சீத்தாப்பழம் கூழில், 46.4 மில்லிகிராம் அளவிற்கு வைட்டமின் சி உள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தி சிறந்த முறையில் இருக்க நாள் ஒன்றுக்கு, நமக்கு 90 மில்லிகிராம் வைட்டமின் சி தேவைப்படுவதாக, அமெரிக்க உணவுத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த பழ கூழில் உள்ள 626 மில்லிகிராம் அளவிலான பொட்டாசியம், ரத்த அழுத்த மாறுபாட்டை ஒழுங்குபடுத்தவும், கடுமையான உடற்பயிற்சியின் போது ஏற்படும் சோர்வை போக்கவும் பயன்படுகிறது.

​மருத்துவ பயன்கள்

முள் சீத்தாப்பழம், கிராவியோலா அல்லது கோனாபானா என்றும் அழைக்கப்படுகிறது.

கிராவியோலா டீ - முள் சீத்தாப்பழ தாவரத்தின் இலைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்துவதோடு, காய்ச்சல் உள்ளிட்டவைகளை குறைக்கிறது. Herpes போன்ற பால்வினை நோய்களில் இருந்தும் இது தீர்வு அளிப்பதாக சிலர் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என்றபோதிலும், முள் சீத்தாப்பழத்தின் சாறு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

​புற்றுநோய் தடுப்பு சக்தி

2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், முள் சீத்தாப்பழம் மரத்தின் பட்டை, வேர்கள் மற்றும் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, புற்றுநோயை தீவிரமாக தடுப்பது மட்டுமல்லாது, அதிக தீங்கு விளைவிக்காத நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இது, மனிதர்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளில், முள் சீத்தாப்பழத்தின் சாறு, புற்றுநோய் செல்களை சிறந்த முறையில் அழிக்கிறது. முள் சீத்தாப்பழம் தாவரத்தில் இருந்து பெறப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை காட்டிலும் இந்த பழத்தை நாம் பச்சையாகவே சாப்பிட்டு வந்தால் அதிக பலன்கள் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தாவரத்தின் இலைகளை கொண்டு டீ செய்து குடித்தும் நல்ல பலன்களை பெறலாம்.

​ஜீரண மண்டலத்தை ஊக்குவிக்கிறது

முள் சீத்தாப்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, நமது உடலின் ஜீரண சக்தியை ஊக்குவிப்பதாக உள்ளது. இந்த பழத்தின் சாறு, சிறுநீர் பெருக்கி ஆகவும், இரைப்பை குடல், மற்றும் உணவுக்குழாய் பகுதிகளில் சேகரம் ஆகியுள்ள அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது. ஆய்வகங்களில், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகளில், இந்த பழத்தின் சாறு, கேஸ்ட்ரிக் அல்சரை குணப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.

​வீக்கங்களுக்கு எதிராக போரிடுகிறது மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒப்பிடும்போது, முள் சீத்தாப்பழத்தில், ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகளவில் உள்ளன. இது நமது உடலில் பழுதடைந்த செல்களை சரிசெய்வதோடு மட்டுமல்லாது,. நமது உடலில் தேவையில்லாமல் ஏற்படும் வீக்கங்களை தடுக்க உதவுகிறது.

​ஒவ்வாமைகள்

முள் சீத்தாப்பழத்தில், ஒவ்வாமையை (அலர்ஜி) தடுக்கும் பண்புகள் இருப்பதாக எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் பெரும்பாலும், அலர்ஜியை ஏற்படுத்தவல்லதாகவே உள்ளன.

பாதகமான விளைவுகள்

முள் சீத்தாப்பழத்தை பச்சையாகவோ, சாறு எடுத்தோ அல்லது இலைகளை கொண்டு டீ செய்து சாப்பிடவோ, கீழ்க்கண்ட பாதிப்புகள் அல்லது குறைபாடுகள் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கிராவியோலா டீ – ஆய்வகத்தில் சோதனை விலங்குகளில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

ஹைபர்டென்சனை குறைப்பதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் தொடர்பான நோய் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக நோய்கள் அல்லது குறைபாடுகள் உள்ளவர்களும் இதை தவிர்க்க வேண்டும்.

​வகைகள்


உலகின் சில பகுதிகளில், இனிப்பு சுவை நிறைந்த ( அமிலத்தன்மை குறைந்த) மற்றும் புளிப்புச்சுவை கொண்ட முள் சீத்தாப்பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இனிப்பு சுவை கொண்ட முள் சீத்தாப்பழங்கள், மக்களால் பெரும்பாலும், விரும்பி உண்ணப்படுகின்றன.

முள் சீத்தாப்பழ தாவரத்தின் இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் டீ, மனதை இலகுவாக்கவும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் உள்ளது.

​எது சிறந்தது?

மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில், இந்த பழம் பெரும்பாலாக கிடைக்கிறது பெரிய பெரிய கடைகளில், இந்த பழத்தின் சாறு இன்ஸ்டண்ட் வகையிலும் கிடைக்கிறது.

செரிமோயாவுக்கு சிறந்த மாற்றக முள் சீத்தாரப்பழத்தின் சாறு விளங்குவதால், முன்னணி கடைகள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திலும், இதன் விற்பனை அதிகளவில் உள்ளது. இது சீத்தாப்பழத்தின் குடும்பத்தை சார்ந்தது என்பதால், இதில் அதிகளவில் சத்துக்கள் உள்ளன.

செரிமோயா பழத்தில், புற்றுநோயை தடுக்கும் பண்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செரிமோயா கிடைக்காத பட்சத்தில், முள் சீத்தாப்பழத்துடன், ஸ்ட்ராபெர்ரி, பைன் ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தை சரிவிகிதத்தில் கலந்து பயன்படுத்த நல்ல பலன்கள் கிடைக்கிறது.

முள் சீதாப்பழங்கள் பழுக்காத பட்சத்தில், நமது அறை வெப்பநிலையிலேயே வைத்து பராமரிக்கலாம். பழுத்த பழங்களை, பிரிட்ஜில் வைத்து பராமரிக்க வேண்டும்.

வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில், இந்த பழங்கள் அதிகளவில் கிடைப்பதால், இதை இப்பகுதி மக்கள் பச்சையாகவே உண்டு மகிழ்கின்றனர். இதுமட்டுமல்லாது, இந்த பழத்தின் சாறை கொண்டு சர்பத், ஸ்மூத்திகள், ஐஸ்கிரீம்கள், கேண்டீஸ், இனிப்பு பானங்கள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments