நீரிழிவு கட்டுக்குள் வர சில டிப்ஸ் !


ஒரு தேக்கரண்டி வேப்பங்கொழுந்து சாறு தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தவும். 

வேப்ப இலை பத்து அல்லது 12 எடுத்து மென்று தினமும் விழுங்கவும். 

நாவல்பழத்தின் கொட்டைகளை இடித்து பொடித்து பாலில் கரைத்துக் குடிக்கவும். 

¼ டீ ஸ்பூன் சுத்தமான மஞ்சளை தேனில் குழைத்து தினம் சாப்பிடலாம். 

கறிவேப்பிலை இலை 5-10 தினமும் வெறும் வயிற்றில் மென்று தின்னலாம். 

வலது உள்ளங்கையின் நடுப்பகுதியில் சில நிமிடங்கள் தொடர்சியாக அழுத்திவிட இன்சுலின் சுரக்கும் விகிதம் கூட வாய்ப்புண்டு. 

பாகற்காய் மற்றும் மொந்தான் மற்றும் வாழைத்தண்டு சாறு வாரம் தவறாது சாப்பிடுதல் நலம். 

எதைச் சாப்பிட்டலும் மிகவும் நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சுவைத்து சாப்பிடுதலும்,பானங்கள் அருந்தும்போது உறிஞ்சிக் குடித்தலும் சாலச்சிறந்தது. 

பசும் காய்கறிகள்,கீரை வகைகளில் ஜூஸ் அருந்துவது மிக சிறந்த பயனை தரும். 

5 வேளையாக சிறுசிறு அளவு உணவை மென்று சுவைத்து தின்றால் குருதியில் உடனடியாக சர்க்கரை அளவு உயராமல் இருக்கும். 

வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சக்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். 

தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் 

பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால்,சக்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். 

தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள்ளவும். 

பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பதுநல்லது. 

காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ்,ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்க உதவும். 

பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும். 

பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம்,வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சக்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது. 

உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சக்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சக்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் 

முக்கியமான உணவுகள்: சக்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம்,வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும். 

இயற்கை இனிப்பு: சக்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சக்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். 

அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும். 

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். 

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.அதி காலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு காயைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்குகுணம் கிடைக்கும். 

நீரிழிவைக் கட்டுப்படுத்துதல்:- 

சுடுநீர் குளியல் அல்லது சுடுநீர் தொட்டியில் குளியல் சர்க்கரையின் அளவை குறைக்கவும் இன்சுலின் தூண்டவும் காரணமாக அமைகிறது.10 (அ) 15 நிமிடமாவது சுடுநீர் தொட்டியில் இருக்க நல்ல பயன் தரும். 

பாகற்காய் அல்லது கரேலா: 

நீரிழிவு கட்டுப்படுத்துதல் என்று வரும் போது கரேலா, சரியான காய்கறி ஆகிறது, குறிப்பாக நீரிழிவு நோய்க்கு, நீங்கள் முடிந்தவரை பல உணவுகளில் இந்த காய்கறியைச் சேர்க்க வேண்டும் என்றாலும், காலையில் வெறும் வயிற்றில், முதல் விஷயமாக, நான்கு பாகற்காய்களின் சாற்றைக் குடிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார். இந்த சாற்றை விதைகள் இல்லாமல் செய்ய வேண்டும். விதைகளை வீணடிக்க விரும்பவில்லையென்றால், விதைகளைத் தூள் செய்து, அதை உங்கள் உணவில், காய்கறி நன்மையை இணைத்துக்கொள்ள ஒரு வழியாகத் தெளிக்க வேண்டும். 

ஆம்லா அல்லது இந்தியநெல்லிக்காய்:

வைட்டமின் சி நிரம்பிய, ஆம்லா, நீரிழிவுக்கு நிவர்ரணம் த்ரும் அமுதமாகும்.. தினமும் ஒரு மேஜைக்ரண்டி ஆம்லா சாற்றை ஒரு கப் பாகற்காய் சாற்றுடன் குடித்து வந்தால், அது வலியுணர்வு அண்டிய உணர்வுகளின் முறையான செயல்பாட்டை தூண்ட உதவ முடியும். 

நாவல்பழம் அல்லது ஜாமூன்:

நீரிழிவுக்கு எதிரான ஒரு மிகவும் சக்திவாய்ந்த வீட்டுத் தீர்வு என அழைக்கப்படும், நாவல் பழம்

ஜாமூன், கணையம் செயல்பட பெரிதும் உதவுகிறது என்பதால் நீரிழிவுக்கு மிகவும் சிறந்ததாகும். இதைத் தவிர, நீரிழிவுக்கு மட்டும் பயனுள்ளதான பழமாக இல்லாமல், அதன் விதைகள் கூட இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும்.. இந்த பழத்தைப் பயன்படுத்த, பழத்தின் விதைகளை எடுத்து, காயவைத்து மற்றும் அவைகளை நசுக்க வேண்டும். ஒரு ஸ்பூன் இந்தத் தூளை, ஒரு கப் பாலுடன்ஃதண்ணீருடன் அல்லது தயிருடன் சேர்த்து இந்தக் கலவையை தினமும் இரண்டு முறை சாப்பிடவும் 

வெந்தயம் அல்லது மெந்தி:

நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்த, மற்றொரு பொதுவான பழமாகும். இந்த சிறிய விதை காலக்டோமனன் கொண்டுள்ளது, இயற்கையில் கரையக்கூடிய நார்ச்சத்து. இரத்த சர்க்கரை உறிஞ்சுதல் வேகத்தைக் குறைக்கிறது. நீரில் இரவில் 25 கிராம் விதைகளை ஊற வைத்து, காலையில் இந்த தண்ணீரை முதல் விஷயமாகக் குடிக்க வேண்டும். 

கருப்பு உளுந்து (அ) கருப்பு கடலை: 

இது ஒரு நபரின் நீரிழிவு, குறிப்பாக நாள்படாமல் ஆகும் இருக்கும் சந்தர்ப்பங்களிலும், மற்றும் ஆரம்ப நிலைகளிலும் சிற்ப்பாக உள்ளது. புதிதாக செய்யப்பட்ட அரை கப் பாகற்காய் சாறுடன் முளைத்த உளுந்து இரண்டு தேக்கரண்டி சேர்க்க வேண்டும். இந்தக் கலவையுடன் தினமும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு ஒருமுறை. போதுமானது. 

மா இலைகள்: 

இளந்தளிரான மா இலைகள் கணையம செயல்பாடுக்கு உகந்ததாக இருப்பதால்,அவை நீரிழிவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒருவரின் ரத்த சர்க்கரை அளவைக் பராமரிக்கவும் உதவும். இந்தத் தீர்வு பயன்படுத்த, 15 கிராம் புதிய இலைகள் பறித்து எடுத்து, 250 மி.லி. தண்ணீரில் இரவே அவைகளை ஊற வைக்கவும். அடுத்த நாள் காலை, நீரில் அவைகளை நன்கு கசக்கி கலவையை வடிகட்டவும்.இப்போது இந்த கலவையை வெறும் வயிற்றில் தினமும் காலையில் அருந்தவும். இந்தத் தீர்வு நீரிழிவு பாதிக்கப்படும் நிலைக்கு முன்பாக உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Post a Comment

0 Comments