நினைவாற்றலை வளர்க்க


முடிந்த அளவு பழங்களை உண்ணுதல். 

இரவு படுக்கைக்கு முன்பு 15 நிமிடம் நல்ல காற்றோட்டத்தில் நடைப்பயிற்சி செய்தல். 

வல்லாரை,தூதுவளை போன்ற மூலிகைக் கீரைகளையும்,சாதாரணக் கீரைகளையும்,வெண்டைப் பிஞ்சுகளையும் பச்சையாக உண்ணுதல் நல்ல பலன் தரும். 

லைகோ போடியம் 200 மற்றும் அனகார்டியம் 200 என்ற ஹோமியோ மருந்துகள்மிக சிறந்த பலன்கள் அளிக்கும். 

படிக்கும் பாடங்களை மனதில் நினைவுக்கு கொண்டுவர தினமும் 20 நிமிடம் மனப் பயிற்சி செய்தல் வேண்டும். 

சதுரங்கம் ஆடுதல்.ஓவியம் வரைதல் நினைவாற்றலை வெகுவாக கூட்டச் செய்யும். 

தினசரி விடியலுக்கு முன்பு 10 நிமிடம் தியானம்( கண் மூடி ) செய்தல் நல்ல பலன் தரும். 

பழங்களை ஜுஸ் போடாது சுவைத்து மென்று உண்ணுதல் நன்று. 

மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல.... ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

எளிய பயிற்சிகளை தினமும் விடியற் காலையில் செய்தல்.

அதிக காரம்,உப்பு,புளிப்பு இவற்றை தவிர்க்கலாம் 

நிதமும் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு ஆகிய பழங்களை உட்கொண்டோமானால் நினைவாற்றல் பெருகுவதோடு, மூளையும் உரிய முறையில் பாதுகாக்கப்படுகிறது. 

சிவப்பு முள்ளங்கி, தக்காளி, கொடிமுந்திரி, கிச்சிலி, குருதிநெல்லி போன்ற பள பளப்பான நிறத்திலான உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான உயிர்ச்சத்துகள், கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை நினைவாற்றலைப் பெருக்க உதவும், கவனக்குறைவைப் போக்கும். 

மேலும் மூளையைக்காத்து நினைவாற்றலைப் பெருக்கும் உணவுகள்:

1) வால் நட்ஸ் (வாதுமைப் பருப்பு) 

2) கேரட்

3) புளு பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள்

4) மீன்

5) காஃபி மற்றும் டீ

6) ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை

Post a Comment

0 Comments