மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வு


வேலிப்பருத்தி இலையும் சாம்பிராணியும் சேர்த்து அரைத்து முழங்கால் மீது தடவ மூட்டுவலி கட்டுக்குள் வரும். 

மூட்டு வலி குணமாக, அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும். 

சித்தரத்தையை இடித்து தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்து காலை, மாலை சாப்பாட்டுக்குப் பின்பு தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். 

மூட்டுவலி உள்ளவர்கள் காரத்தைக் குறைக்க வேண்டும்; குறிப்பாக பச்சைமிளகாய் கூடாது. சாதாரண காப்பிக்கு பதில் சுக்குக் காப்பி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும். 

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மூட்டுவலி அதிகமாகும். ஆகவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்து ராகிக் கஞ்சி குடிப்பதுதான்! 

ஒருவருக்கு மூட்டு வலி வருவதில் அவருடைய உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், சர்க்கரை, உப்பு, கரையக்கூடிய கொழுப்புகள் ஆகியவை சரியான விகிதத்தில் அடங்கிய ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும். 

வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) சரியான அளவில் நம் உணவில் இருக்குமாறுபார்த்துக்கொள்ளவேண்டும் 

1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி

ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்துசூப் செய்து சாப்பிடவும்.

இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும். 

சமைக்காத பச்சைக் காய்கறிகளம மர்றும் பழங்கள், இயற்கை உணவுகள் இந்த நோய்க்கு அருமருந்தாகவிளங்குகிறது. கிழங்குவகைகள்தவிர்த்தல்வேண்டும். 

உங்கள் உடல் எடை அனைத்துப் பக்கமும் சீராக இருக்கும்படி உங்கள் உடல் அமரும் நிலை மற்றும் இதர உடல்நிலைகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளவும். 

தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை பூஜ்ஜிய பிராண உணவுகள். இவற்றை ஆரோக்கியமானவர்கள் ருசிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், மூட்டு இணைப்புகளில் வீக்கமோ வலியோ அல்லது உட்காரும்போதோ, நிற்கும்போதோ மூட்டு இணைப்புகளில் வலி உணர்பவர்கள், மற்றும் அதிக நேரம் உட்காரும்போது கால்களில் வீக்கம் ஏற்படுபவர்கள், இவற்றை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை மூட்டு நோய்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும் 

எடை அதிகமாக இருந்தால் அது மூட்டுகளுக்கான வேலைப் பழுவை அதிகரித்து அவற்றை மேலும் சேதமாக்கும். எடைக் குறைப்பிற்கு ஏற்றதாக கொழுப்பு இனிப்பு மாப்பொருள் குறைந்த போசாக்கான உணவு முறையைக் கடைப்பிடியு;கள். உடற் பயிற்சி மூலமும் குறைக்க நடவடிக்கைஎடுங்கள். 

மூட்டுவலி ஏற்படாமல் தடுக்க,நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்பது நல்லது. குறிப்பாக இரவு வேளைகளில் நாம் உட்கொள்ளும் உணவு மென்மையானதாகவும், எளிதில் செரிமானமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். 

அரைவயிறு உணவே இரவில் நல்லது.நீண்ட பட்டினி, அதிகமான டீ, காபி, மது, புகை, போதை வஸ்துக்கள் இவைகளால் குடல் அலர்ஜி ஏற்பட்டு வாயு சீற்றமாகி அதுவே கால் மூட்டுவலியை உண்டாக்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. 

அதிக உஷ்ணத்தையும், வாயுவையும் கொடுக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது.அதிக புளிப்பு காரங்களைத் தவிர்ப்பது நல்லது.கீரைகள், பழங்கள், காய் கறிகள், மூலிகை சூப் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. கை, கால்களை நன்கு வீசி நடக்க வேண்டும். குறிப்பாக கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்யவேண்டும். 

உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் சீராக இருந்தால் நோயில்லா வாழ்க்கை வாழலாம்.

தினசரி 40 நிமிட நடை. பின் 15 நிமிட ஓய்வு. அதைத் தொடர்ந்து 30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரியவணக்கத்துடன் முதலான 4-5 யோகாசன்ங்கள், கால்சியம்-கீரை நிறைந்த, புளி வாயுப் பொருட்கள் குறைந்த உணவு இவற்றுடன் கண்டிப்பாய் ஒரு குவளை மோர், ஒரு கிண்ணம் பழத்துண்டுகள், 30-45 நிமிட மாலை நடை மூட்டுவலி அதிகம் உங்களை அணுகாது.

Post a Comment

0 Comments