பாகுபாடு இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது


ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை தான் இது

இது சிறுநீரகத்திலோ, சிறுநீரகம் வரும் பாதையிலோ, சிறுநீரகம் தேக்கி வைக்கும் இடத்திலோ கூட உண்டாகலாம். இதனால் சிறுநீர் போகும் போது தாங்க முடியாத வலி உண்டாகும்.

குறைவாகத் தண்ணீர் அருந்துதல், உடல் சூடு அதிகமாதல், பிட்டத்தில் கட்டிகள் ஏற்படுதல், சில பாலியல் நோய்களின் தாக்கம் என்று நீர்க்கடுப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.

இதனை எளிய முறையில் தீர்க்க சில எளிய வீட்டு வைத்திய முறைகள் உண்டு. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

அதிக தண்ணீர் பருகாதவர்கள் கோடையில் நீர்க்கடுப்புக்கு உள்ளாகும் போது பார்லி அரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதற்கு 10 மடங்கு அளவு நீர் விட்டு கொதிக்க விடவேண்டும். குக்கரிலும் 5 முதல் 6 விசில் வரை விட்டு இறக்கி அந்த நீரை மேலாக்க எடுத்து குடித்தால் சிறுநீர் கடுப்பு உடனே குறையும். தினமும் இரண்டு முறை எடுக்கலாம்.

கருப்பட்டியை பொடி செய்து வைக்கவும். புளிக்கு 6 மடங்கு அளவு கருப்பட்டியை சேர்க்க வேண்டும். கருப்பட்டியை நன்றாக பொடித்து வைக்கவும். புளியை கரைத்து அரை தம்ளர் அளவு எடுத்து அதில் கட்டியில்லாத கருப்பட்டி பொடியை சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். கருப்பட்டி இல்லாதவர்கள் பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்க்கலாம்.

இரண்டு டீஸ்பூன் அளவு தோல் உளுந்தை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட வேண்டும். பிறகு மறுநாள் காலை பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் இந்த நீரைமட்டும் குடிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவந்தாலே சிறுநீர் எரிச்சல் இருக்காது.

சீரகத்தை இலேசாக வறுத்து பொடித்துகொள்ள வேண்டும். டைமண்ட் கற்கள் என்னும் வெள்ளை நிற கற்களை தவிர்த்து பழுப்பு நிறத்தில் இருக்கும் கற்கண்டை (பெரியதாக இருக்கும்) வாங்கி அதை பொடியாக்கவும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் சீரகப்பொடியையும் இரண்டு டீஸ்பூன் கற்கண்டை பொடிய்ம் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும். தினமும் மூன்று வேளை இதை குடிக்கலாம்.

இளநீரை வாங்கி வெட்டி அதில் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயத்தை சேர்த்து அப்படியே மூடி வைக்கவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து இளநீரை குடித்தால் உடல் உஷ்ணம் முழுவதும் குறைந்து அப்படியே குளிச்சியாக்கும்.

நீர்முள்ளி இலையை சுத்தம் செய்து உரலில் இட்டு இடித்து வைக்கவும்.புழுங்கலரிசியை பானையில் வேகவைத்து சோறு நன்றாக கொதித்துவரும் போது பானையிலிருந்து ஒரு சொம்பு நீரை எடுத்து அகலமான பாத்திரத்தில் போட்டு நீர்முள்ளி இலையை கையளவு சேர்க்கவும்.


Post a Comment

0 Comments