கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகள்


கால்சியம் சத்து அதிகரிக்க எந்த உணவுகளைச் சாப்பிடலாம்..?

கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். குறிப்பாக பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் பற்றாக்குறையை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

பால் பொருட்கள் : பால் கால்சியம் சத்து நிறைந்தது என்பதால் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ், பனீர், தயிர் போன்றவையும் கால்சியம் நிறைந்தவைதான்.பாதாம் : நட்ஸ் வகைகளிலேயே பாதாம் 378 mg கால்சியம் சத்து நிறைந்தது. அத்துடன் காப்பர், மெக்னீசியம், வைட்டமின் E போன்ற சத்துக்களையும் உள்ளடக்கியது.

ப்ரக்கோலி : காய்கறிகளிலேயே ப்ரக்கோலிதான் அதிக கால்சியம் சத்து நிறைந்தது.

அத்தி : காய்ந்த அத்திப் பழம் சாப்பிடுவதும் கால்சியத்தை அதிகரிக்கும்.கீரை : கீரை வகைகள், பச்சைக் காய்கறிகளிலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

Post a Comment

0 Comments