ஆரோக்கியம் அளிக்கும் புதினா புலாவ் செய்யும் முறை

Time: 30 min
Jion with us
Click to Subscribe
இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் கீரைகளையும் கேரட், பீன்ஸ் மற்றும் பீட்ரூட் போன்ற அனைத்து வகையான காய்களைச் சாப்பிடுவது நல்லது. வீட்டிலேயே அருமையான முறையில் புதினா புலாவ் செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருட்கள்:
 • பாஸ்மதி அரிசி - ஒரு கப்
 • புதினா - ஒரு கப்
 • வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)
 • கேரட், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 • பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)
 • தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
 • பூண்டு - 7 பல்
 • பச்சை மிளகாய் - 4
 • உப்பு - தேவையான அளவு
 • தண்ணீர் - ஒன்றரை கப் (அ) ஒன்றே முக்கால் கப்
தாளிக்க
 • பிரியாணி இலை - ஒன்று
 • கிராம்பு - 2
 • பட்டை - 3 சிறிய துண்டு
 • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :

புதினாவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்

அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம், கேரட், தக்காளி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

Post a Comment

0 Comments