மனித குடலை சுத்தம் செய்ய உதவும் இயற்கை உணவு முறைகள்


மனித குடலில் இருவகைகள் உண்டு. அவை சிறுகுடல் மற்றும் பெருங்குடல் என்று இருவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரது குடலில் கழிவுகள் அதிகம் தேங்கினால், அது பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. ஒருவரது குடல் சரியாக செயல்படாமல் இருந்தால் சரும அழற்சி, பித்தப்பை கற்கள், இதய நோய்கள் போன்ற கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுபடவும் குடலை சுத்தம் செய்யவும் சில இயற்கை உணவு முறைகள் பெரிதும் உதவி புரியும்.

தற்போது அவை என்னென்ன என்பதை விரிவாக இங்கு பார்ப்போம்.

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சி ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் இரண்டு முறை குடித்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் ,ஆப்பிள் - 1 ,பசலைக்கீரை - 1 கப் ,கேரட் - 1 ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு அத்துடன் 1 கப் நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இப்போது இஞ்சி ஸ்மூத்தி தயார். இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்தால், குடல் பாதையின் செயல்பாடு சரியான முறையில் நடக்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் நீர் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்கலாம்.
  • இந்த பானம் டாக்ஸின்களை நீங்குவதோடு மட்டுமின்றி, சர்க்கரையை நோயைத் தடுப்பது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்கிறது.
  • பீன்ஸ், பருப்பு வகைகள், திணை, ஓட்ஸ அல்லது காய்கறிகளான பீன்ஸ், புருஸல்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், குடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்வதற்கும், நார்ச்சத்து பெரிதும் உதவி செய்ய வேண்டும்.
  • குடல் ஆரோக்கியத்திற்காக ஒருவர் ஒரு நாளைக்கு 2 முதல் 2.5 மிலி வரை நீர் பருக வேண்டியது முக்கியம். அதுவும் 1/2 விட்டர் நீரில் 1 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இச்செயலால் குடல் முழுமையாக சுத்தம் செய்யும்.
  • ஆளி விதைகளை நீரில் சேர்த்து ஊற வைத்து, சாலட்டுகள், மில்க் ஷேக் போன்றவற்றின் மேலே தூவி சாப்பிடலாம்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் நீரில் 5-10 நிமிடம் வரை ஊற வைத்து பின் அந்த விதைகளை ஒரு கப் தயிருடன் சேர்த்து கலந்து கொண்டு, இந்த கலவையை ஒரு நாளைக்கு 4 முறை என தொடர்ந்து 4 வாரங்கள் உட்கொள்ளலாம். அப்படி செய்தால் குடல் பாதை சுத்தமாக இருக்கும்.

Post a Comment

0 Comments