ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பதால் நிகழும் அற்புதங்கள்


ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பதால் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா ?

ஆப்பிள் சீடர் வினிகரின் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பற்றி படித்திருப்பீர்கள். ஆனால் அவற்றுள் சில நிஜமாகவே பலன் தரக்கூடிய ஆரோக்கிய முறைகளை பற்றி அறியலாம். ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன.

இதை தினமும் காலையில் 1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீருடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலனை அள்ளித் தரும்.இதை நேரடியாக பயன்படுத்த வேண்டாம். இதை அப்படியே சாப்பிட்டால் சீரணிக்காமல் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை 1டம்ளர் தண்ணீருடன் கலந்து குடித்தால் எந்த வித தீங்கும் வராது.

இதை அதிகமாக பயன்படுத்தவும் கூடாது. ஆப்பிள் சீடர் வினிகர் நிறைய பிரச்சினைகளான விக்கல்கள், சளி பிரச்சினைகள், இதய நோய்கள் போன்றவற்றிலிருந்து காக்கிறது.

இரவில் படுக்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்!
மேலும் ஆர்கானிக் ஆப்பிள் சீடர் வினிகர் நச்சுக்களை வெளியேற்றுதல், சீரண சக்தியை மேம்படுத்தல், உடல் ஆற்றல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

இதில் உள்ள அசிடிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம், புரோபயோடிக்ஸ் மற்றும் என்ஜைம்கள் போன்றவை மருந்துப் பொருட்களாக செயல்படுகின்றன.

இந்த கட்டுரையில் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீருடன் சேர்ந்து பருகுவதால் கிடைக்கும் பலவிதமான நன்மைகளை பற்றி பார்க்க போறோம்.

நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மைக்கு உதவுதல்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி பயாடிக் பொருட்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை மேம்படுத்துகிறது. எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளை அமிலத்தன்மையை சமமாக்கி குறைக்கிறது. 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் 1 கிளாஸ் தண்ணீருடன் குடித்தால் நல்ல மாற்றத்தை அடையலாம்.

கொலஸ்ட்ரால்
இது ஆரோக்கியமான கொலஸ்ட்ராலுக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல் உயர் கொலஸ்ட்ராலால் ஏற்படும் இரத்த குழாய் களின் பாதிப்பு மற்றும் ஆக்ஸிடேஷன் போன்ற பாதிப்பிலிருந்து காக்கிறது.

உடல் எடை குறைதல்
ஆப்பிள் சீடர் வினிகர் உங்கள் எடையை குறைக்க உதவுகிறது. உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை சரியான அளவு குறைக்கிறது.

உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து அதன் மூலம் எடையை குறைக்கிறது. இதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் தண்ணீருடன் கலந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்திருப்பதை காணலாம்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்
இதில் உள்ள ஆன்டி கிளைசெமிக் பொருட்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் ஸ்டார்ச் சீரணிப்பதை தடுத்து அதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருட்கள்
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகின்றன. இதில் கேட்ஷின், காலிக் ஆசிட், காஃபிக், குளோரோஜெனிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய்கள் வராமல் இருக்க போராடுகின்றன

ஊட்டச்சத்துகளை உறிஞ்சுதல்
நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகின்றன. இதை நீருடன் குடிப்பதோடு சாலட்டுடன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் எளிதாக நமது உடலால் உறிஞ்சப்படுகிறது.

தசைகளுக்கு ஆற்றலை தருகிறது
விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற் பயிற்சியாளர்கள் போட்டிக்கு முன்னாள் இரவில் ஆப்பிள் சீடர் வினிகருடன் தண்ணீர் கலந்து குடித்தால் தசைகளுக்கு போதுமான ஆற்றலை அளித்து அதிகமான உடற்பயிற்சியை மேற்கொள்ள எரி பொருளாகிறது.

ரத்த அழுத்தம் :
இந்த ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவு குறைகிறது என்ற தகவல்கள் இருக்கின்றன. ஆனால் இது ஆராய்ச்சி பூர்வமாக நீருபிக்கபடவில்லை.

Post a Comment

0 Comments