உடலுக்கு வலுசேர்க்கும் திரிகடுகம் காபி

 


உடலுக்கு வலுசேர்க்கும் திரிகடுகம் காபி

சித்த மருத்துவத்தில் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ எனச் சொல்வார்கள். சுக்கை தோல் சீவித்தான் பயன்படுத்த வேண்டும். மிளகு, பசியைத் தூண்டும். பித்தத்தைச் சமப்படுத்தும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும். திப்பிலி, கோழையைப் போக்கும். சளிப் பிரச்னைகள் நீக்கி, உடலை உற்சாகம் அடையச் செய்யும். பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும். மழைக்காலத்தில் காலை - மாலை இந்த காபி குடித்துவருவது மிகவும் நல்லது.


தேவையானவை: 

  1. மிளகு - 30 கிராம், 
  2. சுக்கு - 50 கிராம், 
  3. திப்பிலி - 5 கிராம், 
  4. கருப்பட்டி, 
  5. காபி தூள் - தேவையான அளவு.!

செய்முறை:

மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்து, அதனுடன் காபி தூள், திரிகடுகம் தூள் கலந்து கொதிக்கவைத்து சூடாகப் பருகலாம்.!

Post a Comment

0 Comments