வெஜ் பிரியாணி

Time: 30 min
Jion with us
Click to Subscribe

உங்கள் சுவையை தூண்டும் வெஜ் பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வெஜ் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
தேவையான பொருட்கள்:
  • பாசுமதி அரிசி - 250 கிராம்
  •  நறுக்கிய கேரட்,
  •  உருளைக்கிழங்கு
  •  பச்சைப் பட்டாணி
  •  பீன்ஸ் எல்லாம் சேர்த்து - ஒரு கப்
  •  இஞ்சி,பூண்டு, பட்டை ,
  • கிராம்பு, ஏலக்காய்) சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டீஸ்பூன்
  •  தக்காளி - 3,
  •  மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்,
  •  தயிர் - 4 டீஸ்பூன்
  •  வெங்காயம்,
  •  பச்சை மிளகாய் – தலாஒன்று
  •  புதினா
  •  எண்ணெய-3 டீஸ்பூன்,
  •  கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
  •  நெய் - 2 டீஸ்பூன்,
  •  உப்பு தேவையான அளவு.
செய்முறை :

ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு அடுப்பில் .

பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.

இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Post a Comment

0 Comments