வேர்க்கடலை பிரியாணி

Time: 40 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
 • மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 •  உப்பு - தேவைக்கேற்ப.
 •  குடமிளகாய் – பாதியளவு
 •  சீரகம் - ஒரு டீஸ்பூன்
 •  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
 •  பச்சை வேர்க்கடலை - ஒரு கப் (ஊறவைக்கவும்)
 •  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 •  தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று
 •  கொத்தமல்லித் தழை – சிறிதளவு
 •  பச்சரிசி - 2 கப்
 •  தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து, தேங்காய்த் துருவல், நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... மூன்றரை கப் நீர், உப்பு, அரிசி, ஊறவைத்த வேர்க்கடலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து குக்கரை மூடவும்
ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளி யேறியதும் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சுவையான வேர்க்கடலை பிரியாணி தயார்.

Post a Comment

0 Comments