செட்டிநாடு வெள்ளை பணியாரம்

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி – 4 கப்
  • உளுத்தம் பருப்பு – 1 கப்
  • பால் - கால் கப்
  • உப்பு – சிறிது
செய்முறை :

அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவிடுங்கள்.
அதன் பிறகு நீரை வடித்து, இரண்டையும் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளுங்கள். மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்.
இத்துடன் பால், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.

சட்டியை அடுப்பில் வைத்து, கால் சட்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் ஒரு கரண்டி மாவு எடுத்து பணியாரமாக ஊற்றுங்கள்.
பணியாரம் எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போட்டு வெள்ளையாக இருக்கும் போதே எடுத்துவிடவும்.
பணியாரத்தை ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவும். இதற்கு தக்காளிச் சட்னி சுவையான இருக்கும்.

கவனத்திற்க்கு :

மாவு கொஞ்சம் கெட்டியாக வைத்து ஒரு பணியாரம் முதலில் ஊற்றி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் பிறகு சிறிது நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments