கேப்பைக்கூழ்


சமைக்க தேவையானவை
  •  எண்ணெய் – தேவையான அளவு
  •  மோர் மிளகாய் – 3,
  •  உப்பு – தேவையான அளவு
  •  கடுகு, உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி,
  •  பெருங்காயத்தூள் – சிறிதளவு,
  •  கேழ்வரகு மாவு – 100 கிராம்,

உணவு செய்முறை
முதலில் மோருடன் உப்பு, கேழ்வரகு மாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
கரைத்த மாவை இதில் ஊற்றி, கூழ் பதமாக கிளறி இறக்கவும். சூடான கேப்பைக்கூழ் தயார்.


Post a Comment

0 Comments