கிட்ஸ் ஐஸ்கிரீம்

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பிரெட்10 ஸ்லைஸ்கள்
  • பால்2 கப்
  • சர்க்கரை1ஃ2 கப்
  • வெனிலா எசென்ஸ்2 ட்ராப்ஸ்
  • பிளம்ஸ் பழம் தேவைக்கு ஏற்ப
  • ஜெம்ஸ் மிட்டாய்தேவைக்கு ஏற்ப
  • சீரக மிட்டாய் தேவைக்கு ஏற்ப 
  • விருப்பமான நட்ஸ்2 டேபிள் ஸ்பூன்
  • ஜாதிக்காய் பொடி2 சிட்டிகை
செய்முறை :

கிட்ஸ் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலை காய்ச்சி ஆற விட்டு, அதில் ஜாதிக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பிறகு அதனுடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து அதை ஃப்ரீசரில் சின்னச் சின்ன கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்து அதை மீண்டும் சின்ன சின்ன கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்.
6 மணி நேரம் கழித்து எடுக்கவும். பிறகு கிளாஸ் பவுலில் பிரெட்டைப் போட்டு, அதன் மீது இந்த பால் ஐஸ்கிரீமைப் போடவும்.
பிறகு பிரெட்டின் மீது மீண்டும் ஐஸ்கிரீமைப் போட்டு, அதன் மேல் நட்ஸ், பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்டாய் ஆகியவற்றை போட்டு கிளறவும். சு+ப்பர் சுவையான கிட்ஸ் ஐஸ்கிரீம் தயார்.

Post a Comment

0 Comments