தேவையான பொருட்கள்:
- வல்லாரைக்கீரை - அரை கட்டு,
- தேங்காய் துருவல், - கால் கப்,
- இஞ்சி - சிறிய துண்டு
- கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் - 5,
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
- எண்ணெய் - 2 டீஸ்பூன்,
- தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
- உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
முதலில் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி...
வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் இவற்றை ஒன்றன் பின்னர் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும். வதக்கிய பொருட்கள் ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் நைசாக அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். பரிமாறவும்.

0 Comments