தேங்காய் துவையல்

தேங்காய் துவையல்
தேங்காய் துவையல்
Time: 30 min
தேங்காய் துவையல்
Jion with us
தேங்காய் துவையல்
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • தேங்காய் துருவல் - அரை கப்,
  •  உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
  •  பச்சை மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),
  •  கறிவேப்பிலை - சிறிதளவு,
  •  பூண்டு - ஒரு பல்,
  •  புளி - கோலி அளவு,
  •  எண்ணெய் - 2 டீஸ்பூன்,
  •  உப்பு - தேவைக்கேற்ப. 

தாளிக்க:
  •  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
  •  பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
செய்முறை :

முதலில் தேங்காய் துருவலை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து வைக்கவேண்டும்.
பின் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளி, பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.
இப்பொழுது இதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைக்கவேண்டும்.
இப்பொழுது மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவேண்டும்
பின் இந்த துவையலை சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம். தேங்காயை வதக்கி இருப்பதால், பயணத்தின்போது எடுத்துச் செல்லவும் ஏற்றது.

Post a Comment

0 Comments