பிரண்டை துவையல்


சமைக்க தேவையானவை
  •  பிரண்டை - ஒரு பிடி
  •  பூண்டு - 3 அ 4 பல்
  •  வெங்காயம் - பாதி
  •  பூண்டு - 3 அ 4 பல்
  •  காய்ந்த மிளகாய் - 2 அ 3
  •  உப்பு - தேவையான அளவு
  •  தனியா - 1/2 தேக்கரண்டி
  •  எண்ணெய் - வதக்க
  •  கடுகு - 1/4 தேக்கரண்டி
  •  உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
  •  கறிவேப்பிலை - சிறிது
  •  எண்ணெய் - தாளிக்க

உணவு செய்முறை
முதலில் பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய்,தனியா,பிரண்டை துண்டுகள்,புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். வதங்கியதும்,ஆற வைத்து,சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர்ஒரு கடாயில்,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும். பிரண்டை துவையல் தயார்.இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம். சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும். பரிமாறவும்.

Post a Comment

0 Comments