தேன் ஐஸ்கிரீம்


தேவையான பொருட்கள் :
  • முட்டை வெள்ளைக்கரு10
  • பால் 1லிட்டர்
  • கிரீம்500 மில்லி
  • தேன்2 கப்
  • வெண்ணிலா எசன்ஸ்2 ஸ்பு+ன்

செய்முறை :
தேன் ஐஸ்கிரீம், செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையையும், தேனையும் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
அதன் பிறகு கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து, கொதிக்க வைத்தப் பாலுடன் முட்டை, தேன் கலந்துள்ள கலவையை சேர்த்து கெட்டியாகும் வரை கலக்கவும். பிறகு கெட்டியான கலவையை எடுத்து வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் கிரீம், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றைக் கலந்து, இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்சாதன பெட்டியில் உறைய வைத்து எடுத்தால் ருசியான தேன் ஐஸ்கிரீம் ரெடி.

Post a Comment

0 Comments