கேசர் பிஸ்தா குல்பி 


தேவையான பொருட்கள் :
  • பால்5 கப்
  • சர்க்கரை 5 டேபிள் ஸ்பூன்
  • சோள மாவு 2 டேபிள் ஸ்பூன்
  • குங்குமப்பு+ 2 சிட்டிகை 
  • பிஸ்தா பருப்பு 4 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் 4 

செய்முறை :
கேசர் பிஸ்தா குல்பி செய்வதற்கு முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் சேர்த்து பத்து நிமிடங்கள் சிம்மில் வைத்து காய்ச்சவும். பிறகு சு+டான பாலில் ஒரு டேபிள் ஸ்பு+ன் குங்குமப்பு+வை சேர்த்து தனியாக வைக்கவும்.
பிறகு சோள மாவை மூன்று மடங்கு தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து பாலில் சேர்த்து விடாது கிளறவும். பிறகு பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பால் கெட்டியாகும் போது அதில் குங்குமப்பு+ கலந்த பாலைச் சேர்த்து, அதனுடன் பிஸ்தா மற்றும் சர்க்கரை பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
நன்கு ஆறியவுடன் குல்பி மோல்டில் போடவும். 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். எடுக்கும் போது, தண்ணீரில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான கேசர் பிஸ்தா குல்பி தயார்.

Post a Comment

0 Comments