சத்தான பச்சைப்பயறு துவையல்


சமைக்க தேவையானவை
  •  காய்ந்த மிளகாய் – 5
  •  பச்சைப்பயறு - அரை கப்
  •  பூண்டு - ஒரு பல்
  •  புளி - கோலி அளவு
  •  இஞ்சி - சிறிய துண்டு
  •  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
  •  தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
  •  உப்பு - தேவைக்கேற்ப.

உணவு செய்முறை
முதலில் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும் .
பின்பு பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துவைக்கவேண்டும் .
ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

Post a Comment

0 Comments