கொள்ளு ரசம்


சமைக்க தேவையானவை
 •  கடுகு, சீரகம் –அரை தேக்கரண்டி,
 •  தக்காளி – 2,
 •  காய்ந்த மிளகாய் – 1.
 •  பூண்டு – 3 பல்,
 •  எண்ணெய் – 3 தேக்கரண்டி,
 •  பச்சை மிளகாய் – 2,
 •  சீரகம் – 2 தேக்கரண்டி,
 •  உப்பு – தேவையான அளவு,
 •  மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
 •  மல்லி, மிளகு – ஒரு தேக்கரண்டி,
 •  கொள்ளு – அரை கிண்ணம்,
 •  புளி – 10 கிராம்,

உணவு செய்முறை
முதலில் கொள்ளை ஊறவைத்து அலசி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். ரசப்பொடிக்கான மிளகு, சீரகம், மல்லியை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.
புளியை ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் மசித்த கொள்ளு, தண்ணீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இளஞ்சூட்டில் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை, ரசத்தில் கொட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும். சத்தான கொள்ளு ரசம் தயார்.


Post a Comment

0 Comments