தேவையான பொருட்கள்:
- கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
- பூண்டு - 5 பற்கள்
- சின்ன வெங்காயம் - 10
- தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 4
- இஞ்சி - 2 துண்டு (நறுக்கியது)
- கேரட் - 2;
- தக்காளி - 1
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க :
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- சீரகம் -1 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கடுகு -1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் -1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை :
முதலில் தக்காளி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும் .
பின்னர் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு அதில் கேரட், தக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும்.
பின் வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு மிருதுவாக வரும் வரை அரைத்து கொள்ளவேண்டும் .
பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

0 Comments