முட்டை பணியாரம்


தேவையான பொருட்கள்:
  • இட்லி மாவு ஒரு கப்
  • முட்டை 2
  • சின்ன வெங்காயம் 6
  • பச்சை மிளகாய் 2
  • கறிவேப்பிலை 1 கொத்து
  • கடுகு கால் டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :
வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் தாளித்த பொருட்களை முட்டை இட்லி மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.
பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
சூடான முட்டை பணியாரம் ரெடி!!!


Post a Comment

0 Comments