மீன் தொக்கு

Time: 50 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • முள்ளில்லாத மீன் 10 துண்டுகள்
  • தக்காளி4
  • காய்ந்த மிளகாய்3
  • கறிவேப்பிலை 1 கொத்து
  • வெங்காயம்7
  • மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள்கால் டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள்2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் 1 கப்
  • கரம் மசாலா2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  • எண்ணெய்தேவைக்கேற்ப
  • உப்புதேவைக்கேற்ப
செய்முறை :

மீனை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் பொன்னிறம் ஆனதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். பிறகு தயிரை சேர்த்து கொள்ளவும். சிறிது கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.
சுவையான மீன் தொக்கு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.


Post a Comment

0 Comments