மலச்சிக்கலை போக்கும் ஆலிவ் எண்ணெய்


மலச்சிக்கலை போக்கும் ஆலிவ் எண்ணெய்! எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது.

மேலும் பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது போன்றவை ஆகும்.

இதனை குறைக்க பலர் தெரிந்து கொண்டே மருத்துவரின் ஆலோசணையின்றி மருந்துகளை எடுப்பதுண்டு. இது முற்றிலும் தவறு ஆகும்.

நீங்கள் மலச்சிக்கலை குறுகிய காலத்திலேயே தடுக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே அதற்கான தீர்வுகள் உள்ளது. அது தான் ஆலிவ் எண்ணெய்.

ஆலிவ் எண்ணெய் யை உபயோகித்தால் மலச்சிக்கலை எளிதாக தீர்க்க முடியும் என கூறப்படுகின்றது.

இதில் உள்ள 'நிறைந்த கொழுப்பு" இயல்பாக மலம் கழிப்பதற்கு உதவுகிறது. செரிமான உறுப்புகளின் தசைகளை தூண்டுவதன் மூலம் மலம் எளிதாக வெளியேற்றப்படுகிறது.

தற்போது இதனை எதனுடன் உபயோகித்தால் மலச்சிக்கல் குறையும் என்று இங்கு பார்ப்போம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் பதப்படுத்திய தயிறை எடுத்துக் கொள்ளவும்.ஒரு தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணையை அதனுடன் கலந்து, இதனை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். ஆலிவ் எண்ணையில் கொழுப்புச் சத்து உள்ளதால் இந்த இரண்டும் சேரும் போது மலம் கழிப்பது எளிதாகிறது.

ஒரு தேக்கரண்டி லெமன் சாற்றினை ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையுடன் நன்கு கலந்து இரவு தூங்கும் முன் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில் அமிலத்தன்மையுடன் ஆலிவ் எண்ணெயை அதனுடன் சேரும் போது மலம் கழிக்கும் உடல் பகுதி வறட்சி ஆகாமல் பாதுகாக்கப்பட்டு மலம் எளிதாக கழியும்.

நீங்கள் மலச்சிக்கலினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை காலை வெறும் வயிற்றிலும், இரவு தூங்குவதற்கு முன்பும் எடுத்து கொள்ளலாம். மலச்சிக்கல் சரியாகும் வரை அந்த எண்ணையைப் பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments