தேவையான பொருட்கள்:
- மைதா - ஒரு கப்
- மக்காச்சோள மாவு - ஒன்றரை கப்
- எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- தக்காளி சாஸ் - சிறிதளவு
- சில்லி சாஸ் - சிறிதளவு
- நீளமாக நறுக்கிய முட்டைகோஸ் - சிறிதளவு
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை :
வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் மைதா, மக்காச்சோள மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவாகப் பிசைந்து வைக்கவும்.
மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து உருட்டி, மாவு தொட்டு மெல்லிய வட்டமாகத் திரட்டி, அதன் மேல் டூத்-பிக் அல்லது ஃபோர்க் வைத்து குத்தினால், மாவு எண்ணெயில் போட்டால் உப்பாது. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும், திரட்டி வைத்ததைச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும்.
மாவு லேசாக சிவக்க ஆரம்பிக்கும்போது, ஜல்லி கரண்டியால் வாணலியின் ஓர் ஓரத்தில் இதை நகர்த்தி, இரண்டாக மடிக்க வேண்டும். ஆனால், படகு வடிவத்தில் இருக்க வேண்டும். ரொம்பவும் அழுத்தினால், படகு வடிவம் கிடைக்காது.
அப்படியே எண்ணெயில் காட்டி பொன்னிறமானதும், எடுத்து கிச்சன் டவலில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சிய பின்பு டப்பாக்களில் வைத்து மூடி வைக்கவும்.
ஸ்டஃப்பிங் செய்ய:
ராஜ்மா - கால் கிலோ
வெங்காயம் - அரை கிலோ (ஸ்லைஸ்களாக நறுக்கவும்- சிறிது அலங்கரிக்க எடுத்து வைக்கவும்)
தக்காளி - கால் கிலோ (நீளமாக நறுக்கவும். அலங்கரிப்பதற்கு சிறிதளவு எடுத்து வைக்கவும்.)
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ராஜ்மாவை இரவே தண்ணீரில் ஊற விடவும். காலையில், புதிதாக தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேக விட்டு ஆற விடவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய், எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதில் உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து, சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி கரைந்ததும் வெந்த ராஜ்மாவை அந்த தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேகவைத்து மசித்து இறக்கவும்.
மெக்ஸிகன் டாகோஸ் செய்முறை
தயாரித்த ராஜ்மாவைச் சிறிது எடுத்து, டாகோஸ் பூரியின் உள்ளே வைக்கவும்.
அதன் மேல் நறுக்கிய பச்சை வெங்காயம், தக்காளித் துண்டுகளை தூவவும்.
தக்காளி சாஸ், சில்லி சாஸ் முதலியவைகளை தேவைக்கேற்ற அளவு ஊற்றவும்.
நறுக்கிய கொத்தமல்லித்தழை, கோஸ்
முதலியவைகளைத் தூவிப் பரிமாறவும்.

0 Comments