பச்சை மொச்சை பிரியாணி

Time: 60 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
 • உலர்ந்த மொச்சைக்கொட்டை - அரை கப் (ஊறவைக்கவும்)
 •  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 •  சிறிய சதுரவடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள் – 10
 •  பாசுமதி அரிசி - 2 கப்
 •  நெய் - 2 தேக்கரண்டி
 •  எண்ணெய் - 4 தேக்கரண்டி
 •  உப்பு - தேவைக்கேற்ப.
 •  அரைத்துக்கொள்ள: சின்ன வெங்காயம் – 10
 •  அரைத்துக்கொள்ள: இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 •  அரைத்துக்கொள்ள: தக்காளி – 2
 •  அரைத்துக்கொள்ள: மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
 •  அரைத்துக்கொள்ள: கொத்தமல்லித் தழை - கால் கப்.
செய்முறை :

முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும்
.பின் ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்

இதில் மூன்றரை கப் நீர் விட்டு... உப்பு, மஞ்சள்தூள், அரிசி, ஊறவைத்த மொச்சைக்கொட்டை சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும்.

Post a Comment

0 Comments