ரவா இட்லி

Time: 30 min
Jion with us
Click to Subscribe

ரவா தயிர் இட்லி உணவுப் பிரியர்களின் முக்கிய விருப்பம்

தேவையான பொருட்கள்:
  • ரவை 1 ஆழாக்கு
  • சிறிது புளித்த தயிர் அரை ஆழாக்கு
  • மிளகு அரை ஸ்பூன்
  • இஞ்சி ஒரு சிறு துண்டு
  • சீரகம் அரை ஸ்பூன்
  • முந்திரிப் பருப்பு 7 உடைத்தது
  • உப்பு தேவையான அளவு  
  • நெய் 4 ஸ்பூன்
செய்முறை :

ரவையை இரண்டு ஸ்பூன் நெய் விட்டு தீயாமல் வாசனை வரும் வரையில் சிவக்க வறுத்து, தயிரில் கொட்டவும்.
மிளகு, சீரகம் இவற்றைச் சிறிது நெய்யில் வறுத்து இறக்கி வைக்கும் சமயத்தில் இஞ்சித் துண்டுகளையும் போட்டு ஒரு முறை வறுத்துத் தயிரில் சேர்க்கவும்.
உடன் முந்திரிப் பருப்புகளையும் சிறு துண்டுகளாக ஆக்கி நெய்யில் வறுத்துச் சேர்த்து உப்பு போட்டு, வேண்டும் என்றால் தண்ணீர் சேர்த்து, நெய்யையும் சேர்த்து இட்லி மாவுப் பக்குவத்தில் கரைத்து இட்லிப் பாத்திரத்தில் ஓர் இட்லிக்கு ஒரு கரண்டி வீதம் வார்த்து எடுக்கவும்.
இதோ சுவையான ரவா இட்லி தயார்.
பிறகு என்ன? சுடச் சுட பரிமாறவும்.

Post a Comment

0 Comments