தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி - 2 கப்
- பொட்டுக்கடலை - அரை கப்
- கடலைப் பருப்பு - கால் கப்
- தேங்காய் - அரை மூடி (துருவியது)
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வரகு அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கிச் சலித்து எடுக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். அரைத்த வரகு அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஊறவைத்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்துத் தட்டைகளாகத் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
0 Comments