முருங்கைக்கீரை பக்கோடா

Time: 30 min
Jion with us
Click to Subscribe

ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். அந்த வகையில் உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் இந்த முருங்கைக்கீரை பக்கோடா, உடல் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும் தன்மையும் கொண்டது.

தேவையான பொருட்கள்:
  • கடலை மாவு – 200 கிராம்
  • வெங்காயம் – 50 கிராம்
  • முருங்கையிலை – 2 கைப்பிடி அளவு
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
  • நெய் – ஒரு டீஸ்பூன்
  • சோம்பு – ஒரு டீஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நெய்யை உருக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கையிலை, சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, கடலை மாவையும் சேர்த்து நீர் தெளித்து கையால் நன்றாகக் கலக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போடவும். பொன்னிறமாக சிவந்து வரும் வரை பொரித்தெடுக்கவும்.

Post a Comment

0 Comments