குஷ்பு இட்லி

குஷ்பு இட்லி
குஷ்பு இட்லி
Time: 30 min
குஷ்பு இட்லி
Jion with us
குஷ்பு இட்லி
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பொருள் - அளவு
  • புழுங்கல் அரிசி4 டம்ளர்
  • பச்சரிசி4 டம்ளர் 
  • உளுத்தம் பருப்பு2 டம்ளர் 
  • சின்ன ஜவ்வரிசி2 டம்ளர்
  • வெந்தயம்4 டீஸ்பு+ன் 
  • ஆமணக்கு விதை6
  • உப்பு தேவையான அளவு 
செய்முறை :

குஷ்பு இட்லி செய்வதற்கு முதலில் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகவும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்து ஊற வைத்த உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, ஆமணக்கு விதை, வெந்தயம் ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஊற வைத்த புழுங்கல் அரிசி, பச்சரிசியை போட்டு நன்கு அரைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து 10 மணி நேரம் புளிக்க விடவும். 

இட்லி தட்டுகளில் எண்ணெயை தடவி, புளித்த மாவை ஊற்றி இட்லி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

சுவையான குஷ்பு இட்லி தயார்.

Post a Comment

0 Comments