தேவையான பொருட்கள்:
- தினை - 2 கப்
- தேங்காய் - அரை மூடி
- பொடித்த வெல்லம் - ஒரு கப்
- வாழைப்பழம் - ஒன்று
- ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
- நெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
தேங்காயைத் துருவி கெட்டியாகப் பால் எடுத்துக்கொள்ளவும். தினை அரிசியை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப்பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாகக் கரைக்கவும். பணியாரக் கல்லில் நெய்விட்டு ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடிவைத்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
0 Comments