தேவையான பொருட்கள்:
- மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸ், குடமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்
- சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
- இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- கொத்தமல்லித்தழை - 3 தேக்கரண்டி
- பாசுமதி அரிசி - 2 கப்
- முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, பிறகு சிறிதளவு உப்பு, மூன்றரை கப் நீர் சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவும்
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகள் போட்டு வதக்கி, முளைகட்டிய பயறு சேர்த்து மேலும் வதக்கி (முளை உடைந்துவிடாமல்), இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சோயா சாஸ் சேர்த்து இறக்கிவிடவும்
சாதத்தை அதில் சேர்த்துக் கிளறி மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.சுவையான முளைகட்டிய பயறு பிரியாணி ரெடி.

0 Comments