ரைஸ் சிக்கன் சூப்

ரைஸ் சிக்கன் சூப்
ரைஸ் சிக்கன் சூப்
Time: 50 min
ரைஸ் சிக்கன் சூப்
Jion with us
ரைஸ் சிக்கன் சூப்
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
 • சிக்கனின் முழு மார்பகத்துண்டு - ஒன்று
 •  சிக்கன் ஸ்டாக் - இரண்டு லிட்டர்
 •  புழுங்கலரிசி சோறு - ஒரு கோப்பை
 •  மிளகு - ஒரு தேக்கரண்டி
 •  எலுமிச்சைச்சாறு - இரண்டு தேக்கரண்டி
 •  பிரிஞ்சி இலை - ஒன்று
 •  துருவிய எலுமிச்சை தோல் பகுதி - ஒரு தேக்கரண்டி
 •  பெரிய வெங்காயம் - ஒன்று
 •  இஞ்சி - ஒரு துண்டு
 •  பூண்டு - இரண்டு பற்கள்
 •  உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
 •  காய்ந்த தைம் என்ற இலை - அரைதேக்கரண்டி
 •  புதினா இலை - இரண்டு கொத்து
 •  நறுக்கிய புதினா - கால் கோப்பை
செய்முறை :

முதலில் கோழியை சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை நசுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றவும். அதில் கோழியைப் போடவும். தொடர்ந்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, பிரிஞ்சி இலை, புதினா கொத்து, துருவிய எலுமிச்சை தோல் மற்றும் தைம் இலைகளை போட்டு நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.

ஸ்டாக் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பின் அனலை குறைத்து வைத்து மூடியைப் போட்டு வேகவிடவும். அரைமணி நேரம் கழித்து சிக்கன் நன்கு வெந்தவுடன் அதை கரண்டியின் உதவியால் எடுத்து தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு ஸ்டாக்கை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் அதை அடுப்பின் அனலைக் கூட்டி கொதிக்கவிடவும். இதற்கிடையில் வெந்த சிக்கனை பொடியாக உதிர்த்து அதனுடன் சோறு, உப்பு, எலுமிச்சைசாறு மற்றும் நறுக்கிய புதினாவைப் போட்டு நன்கு கலக்கி விடவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து சிக்கன் சூப் தயாரானதும் இறக்கி கோப்பைகளில் ஊற்றி எலுமிச்சை துண்டுகளைப் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

Post a Comment

0 Comments