முருங்கைக்கீரை தண்ணிச்சாறு

முருங்கைக்கீரை தண்ணிச்சாறு
முருங்கைக்கீரை தண்ணிச்சாறு
Time: 30 min
முருங்கைக்கீரை தண்ணிச்சாறு
Jion with us
முருங்கைக்கீரை தண்ணிச்சாறு
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
 • முருங்கைக்கீரை - 2 கப்
 •  பாசிபருப்பு - அரை கப்
 •  வெங்காயம் - ஒன்று
 •  தக்காளி - ஒன்று
 •  பச்சை மிளகாய் - 2
 •  மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 •  உப்பு - தேவைக்கேற்ப‌
 •  பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
 •  பூண்டு - 5 பல்
 •  கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
 •  தேங்காய் - கால் மூடி
செய்முறை :

பாசிபருப்பை கழுவி 10 நிமிடம் ஊற‌ வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் ஊற‌ வைத்த‌ பாசிபருப்பை சேர்த்து வதக்கவும். பருப்பு கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

(தண்ணீருக்கு பதில் அரிசி களைந்த தண்ணீரும் உபயோசிக்கலாம். சுவை நன்றாக‌ இருக்கும்) பருப்பு நன்கு வெந்த‌ பின்னர் ஆய்ந்த‌ முருங்கைக்கீரையை சேர்த்து 2 நிமிடம் வேக‌ விடவும்.

இதனுடன் அரைத்த‌ தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். (தேங்காய் பச்சையாக‌ சாப்பிடுவது நல்லது. அதிகமாக‌ கொதிக்க‌ வைத்தால் கொழுப்பாக‌ மாறும்) வெயிலுக்கு ஏற்ற‌ குளிர்ச்சியான‌ தண்ணிச்சாறு தயார்.

Post a Comment

0 Comments