தக்காளிப் பச்சடி

Time: 30 min
Jion with us
Click to Subscribe

அனைத்து வைட்டமின் சத்துக்களும் அடங்கிய தக்காளிப் பச்சடி

தேவையான பொருட்கள்:
 • துவரம்பருப்பு கால் கப்
 • மஞ்சள்தூள் 1 சிட்டிகை
 • பழுத்த தக்காளி 4  
 • சின்ன வெங்காயம் 1 கைப்பிடி
 • பச்சை மிளகாய் 2  
 • கருவேப்பில்லை தேவையான அளவு  
 • சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு  
 • மல்லித்தழை அரை கப்
 • எண்ணெய் 3 டீஸ்பூன்
 • கடுகு அரை டீஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
 • பெருங்காயம் 1 சிட்டிகை
 • காய்ந்த மிளகாய் 1  
செய்முறை :

தக்காளியை சிறு சதுரங்களாக நறுக்கவும்.
சின்ன வெங்காயத்தை நான்காக நறுக்கவும்.

பச்சை மிளகாயை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக அவித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும்.

மேற்கண்ட அனைத்தும் வெந்ததும் உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து, பருப்பு, தக்காளி கலவையில் சேர்க்கவும்.
இறக்கும் போது நறுக்கிய மல்லித் தழையையும் தூவி கொதித்ததும் இறக்கிவிடவும்.

இதோ சுவையான தக்காளிப் பச்சடி தயார்.
தக்காளிப் பச்சடியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். கோடை காலங்களில் இதனை செய்து சாப்பிடலாம்.

Post a Comment

0 Comments