ஈஸி மஷ்ரூம் சூப்


சமைக்க தேவையானவை:
  •  மஷ்ரூம் - 10 [மீடியம் சைஸ்]
  •  பூண்டு - 10 பல்
  •  நெய் - 2 தேக்கரண்டி
  •  பட்டை - ஒரு துண்டு
  •  கொத்தமல்லி - சிறிது
  •  மிளகு - தேவைக்கு
  •  உப்பு

உணவு செய்முறை : 

முதலில் மஷ்ரூம் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பூண்டு தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
மிளகை பொடி செய்து கொள்ளவும். பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை தாளிக்கவும்.

இது நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து பிரட்டி 2 - 3 கப் நீர் விட்டு தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.
மஷ்ரூம் வெந்ததும் மிளகை தூவி ஒரு கொதி விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும். சுவையான மஷ்ரூம் சூப் தயார்.

Post a Comment

0 Comments