திருநெல்வேலி கோதுமை அல்வா

Time: 50 min
Jion with us
Click to Subscribe

தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகை.  அல்வா  சம்பா கோதுமை சர்க்கரை மற்றும்   நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. புகழ்பெற்ற திருநெல்வேலி அல்வாவை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்பதை செய்முறை விளக்க புகைப்படங்களுடன் இப்போது காணலாம்.

தேவையான பொருட்கள்:
  • சம்பா கோதுமை ஒரு கப்
  • சக்கரை-2 கப்
  • முந்திரி பருப்பு 10 பொடித்தது
  • குங்குமப்பூ சிறிதளவு
  • ஏலக்காய்த் தூள் அரை தேக்கரண்டி
  • நெய்  ஒரு கப்
செய்முறை :

1. சம்பா கோதுமையை நன்கு கழுவி 8 முதல் 10 மணி நேரம் ஊற வைக்கவும் .

2. பின்னர் மிக்ஸி அல்லது கிரைண்டரில் ஊறவைத்து வடிகட்டிய கோதுமையை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

3.ஒரு வடிகட்டி அல்லது சுத்தமான துணி கொண்டு அரைத்த கோதுமையை வடிகட்டி கோதுமைப்பால் எடுக்கவும்.

4. மீண்டும் ஒரு முறை  அரைத்த கோதுமையை  மிக்ஸியில் சேர்த்து அரைத்து வடிகட்டி இரண்டாவது முறை பால் எடுக்கவும்.

5. ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் பொடித்த முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

6. அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

7. 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு சக்கரை பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்துவிட்டதா என்று விரல்களால் தொட்டு சோதனை செய்யவும்.halwa

8. ஒரு கம்பி பதம்  வந்தவுடன் அதனுடன் கோதுமை பால் சேர்த்து நன்கு கிளறவும்.

9. சிறிது கெட்டியானதும் அதில் குங்குமப்பூ சேர்க்கவும்.
10. ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு கரண்டி நெய் சேர்த்து மீண்டும் கிளறவும்.

11. கையை எடுக்காமல் நன்கு கிளறவும் அல்லது அல்வா அடி பிடிக்கும் வாய்ப்புள்ளது .

12. பத்து நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறவும் .

13. 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்கு கிளறவும் அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ளவும்.

14. அல்வாவின் நிறம் நன்கு மாறியிருப்பதை இப்பொழுது காணலாம் மேலும் ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறவும் .

15. இப்பொழுது அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் , ஊற்றிய நெய் பிரிந்து  வருவதை காணலாம்.

16. அடுப்பை அனைத்து விட்டு நெய் தடவிய தட்டில் அல்வாவை கொட்டி ஆறவைக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

Post a Comment

0 Comments