கம்பு, வெஜிடபிள் சூப்

Time: 30 min
Jion with us
Click to Subscribe

வைட்டமின்கள் நிறைந்த கம்பு, வெஜிடபிள் சூப்

தேவையான பொருட்கள்:
 • பீன்ஸ் ஒரு கப்
 • கேரட் ஒரு கப்
 • காலி ஃ பிளவர் ஒரு கப்
 • பெரிய வெங்காயம் ஒன்று  
 • தக்காளி ஒன்று  
 • காளான் அரை கப்
 • கம்பு ஒரு கப்
 • மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
 • ஆலிவ் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
 • இஞ்சி, பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
 • கொத்துமல்லி ஒரு சிறிய கட்டு
 • உப்பு தேவையான அளவு  
 • மிளகாய்த் தூள் தேவையான அளவு  
 • தனியா பொடி தேவையான அளவு  
செய்முறை :

வெங்காயம், காளான், தக்காளி மற்றும் இதர காய்கறிகளை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கம்பை இரண்டு மணி நேரம் நன்கு ஊறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லியை ஆய்ந்து மண் நீக்கி கழுவி தண்ணீரை வடித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து சூடானவுடன் நீங்கள் நறுக்கி வைத்து இருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் படியாக வதக்கவும்.

பிறகு நன்கு வதங்கியவுடன் இஞ்சி - பூண்டு விழுது நறுக்கி வைத்த தக்காளி ஆகிய இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் மீண்டும் ஒரு முறை மேற்கண்டவற்றுடன் சேர்த்து வதக்கவும்.

பின்னர் நன்கு வதங்கிய மாத்திரத்தில் மிளகாய்த் தூள், தனியா பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து ஊறவைத்த கம்பையும் அதனுடன் கொட்டி நன்றாகக் கிளறவும்.

மறுபுறம் நீங்கள் முன்பு நறுக்கி வைத்த காய்கறிகளுடன் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்துத் தேவையான அளவு உப்பைத் தூவி மூடிவிட்டு சில நிமிடங்களுக்கு அடுப்பை குறைவான வெப்பத்தில் வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

பின்னர் நன்கு கொதித்த மாத்திரத்தில் இறக்கி வைத்து அதன் மேல் காளானையும், பொரித்த வெங்காய இதழ்களையும், கொத்தமல்லியையும் தூவி அருந்தலாம்.

உடல் பருமன் உள்ளவர்கள் கம்பு தானிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.

Post a Comment

0 Comments