மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு

மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு
மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு
Time: 30 min
மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு
Jion with us
மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • மணத்தக்காளி கீரை - அரை கட்டு
  •  அரிசி கழுவிய நீர் - ஒரு கப்
  •  தேங்காய் துருவல் - அரை கப்
  •  சின்ன வெங்காயம் - 10
  •  சீரகம் - முக்கால் தேக்கரண்டி
  •  உப்பு
  •  சர்க்கரை - ஒரு சிட்டிகை
  •  மிளகு - சிறிது (தேவையானால்)
செய்முறை :

மணத்தக்காளி கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். மூன்று முறை நீரில் நன்றாக அலசி எடுத்து வைக்கவும்
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். பாத்திரத்தில் கீரையோடு அரிசி கழுவிய நீரை ஊற்றி சர்க்கரை, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சீரகத்தை சேர்த்து வேக விடவும்

தேங்காய் துருவலோடு தேவையான நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுக்கவும். கீரை முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்து வேக விடவும்
முழுவதும் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து லேசாக சூடானதும் எடுத்து விடவும். தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட கூடாது. விரும்பினால் பொடித்த மிளகு தூவி சாதத்துடன் ரசம் போலவோ அல்லது சூப் போலவோ பரிமாறலாம். மிளகு தூவாமலும் சாப்பிட சுவையாக இருக்கும்.

Post a Comment

0 Comments