தேவையான பொருட்கள்:
- சீரக சம்பா அரிசி - 1/4 கிலோ
- தேங்காய் - ஒரு மூடி , தயிர் - அரை கிண்ணம்
- மட்டன் - அரை கிலோ
- லெமன் - 1,புதினா - ஒரு கட்டு,மல்லித் தழை - ஒரு கட்டு
- பெரிய வெங்காயம் - 4
- தாளிக்க: கிராம்பு - 3
- தக்காளி – 3 , உப்பு - தேவையான அளவு
- தாளிக்க: பட்டை - 3 சிறிய துண்டு
- மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
- தாளிக்க:ஏலக்காய் - 3
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- தாளிக்க:பிரிஞ்சி இலை - ஒன்று
- இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தாளிக்க:சோம்பு - 1 தேக்கரண்டி
- இஞ்சி - 50 கிராம் , எண்ணெய் - அரை கிண்ணம்
- பூண்டு - 25 பல் , நெய் - அரை கிண்ணம்
- பச்சை மிளகாய் - 4 , நெய் - அரை கிண்ணம் ,
செய்முறை :
முதலில் குக்கரில் மட்டன் போட்டு அத்துடன் கொஞ்சம் தயிர், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 5விசில் வரும் வரை வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்
பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப்போட்டு வதக்கவும்
வெங்காயம் 2 நிமிடங்கள் வதங்கியதும், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் மீதமுள்ள தயிர் சேர்க்கவும். தேங்காயுடன் இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கிண்ணம் பால் எடுத்து வைக்கவும். தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கிண்ணம் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித்தழை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி 2 விசில் விட்டு குக்கரை இறக்கிவிடவும். பின்பு 10 நிம்டம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும். சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.

0 Comments