கத்தரிக்காய் ரசம்

Time: 40 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
 • கத்திரிக்காய் - கால் கிலோ
 •  தக்காளி - 50 கிராம்
 •  தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
 •  புளி - சிறிய எலுமிச்சை அளவு
 •  பச்சை மிளகாய் - ஒன்று
 •  கார்ன் ப்ளார் மாவு - ஒரு டேபுள் ஸ்பூன்
 •  மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
 •  மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 •  உப்பு - தேவையான அளவு ( ஒன்னறை தேக்கரண்டி)
 •  வெங்காயம் - 50 கிராம்
 •  கறிவேப்பிலை - ஐந்து கொத்து
 •  காய்ந்த மிளகாய் - மூன்று
 •  கடுகு - ஒரு தேக்கரண்டி
 •  சீரகம் - கால் தேக்கரண்டி
 •  எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
 •  பூண்டு - மூன்று பல் (தட்டி கொள்ளவும்)
 •  கொத்தமல்லி தழை - கடைசியில் மேலே தூவ சிறிது
செய்முறை :

முதலில் கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவேண்டும். பின்பு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும். பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவேண்டும் இப்பொழுது தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

பின்பு வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயும் சேர்த்து வதக்கி பின் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துள்ள புளியையும் ஊற்றி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து கத்திரிக்காயை வேகவிட விடவேண்டும்.

பின்பு கத்திரிக்காய் வெந்து புளி மசாலா வாசனை அடங்கியதும் கார்ன் ப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவேண்டும். பின்னர் கெட்டியாக இருந்தால் இன்னும் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Post a Comment

0 Comments