லெமன் டிடாக்ஸ் டயட் என்பது உடல் எடை குறைப்பிற்கு உதவக்கூடியது


லெமன் டிடாக்ஸ் டயட் என்பது உடல் எடை குறைப்பிற்கு உதவக்கூடியது. எலுமிச்சை உடலில் உள்ள கசடுகளை வெளியேற்றுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை வலுவூட்டி உடலை நோய்களிடமிருந்து பாதுகாக்கிறது. உடலில் உள்ள கசடுகள் வெளியேறும் போது உடல் எடை குறைகிறது. இந்த டயட் கலோரிகள் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கிறது.

பொதுவாக எந்தவொரு டிடாக்ஸ் டயட்டும் இதை செய்வதில்லை லெமன் டிடாக்ஸ் டயட் கலோரி டயட்டாக செயல்பட்டு நீண்ட கால உடல் எடை குறைப்பிற்கு பயன்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால் எலுமிச்சையில் அதிகளவு ஆண்டிபாக்ட்ரீயல் பண்புகள் உள்ளது. பிஎச் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. லெமனில் உள்ள சிட்ரிக் ஆசிட் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. உடலின் செயல் திறனை ஊக்குவிக்கிறது. தொடர்ச்சியாக லெமனை உணவில் எடுத்துக் கொள்ளும் போது ஒபிசிட்டி அளவைக் குறைக்கிறது என்று தெரிவிக்கிறார்.

எலுமிச்சை இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. சிட்ரஸ் நிறைந்தது. விட்டமின் சி, ஏ, பி1,பி2, பி3 பி5, பி6 மற்றும் பி9, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு, பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, கொலைன், பாஸ்பரஸ் மற்றும் கார்போஹைட் ரேட், சர்க்கரை ஆகிய அனைத்தும் உள்ளது. விட்டமின் சி தோலில் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

இதனால் இதயநோய்கள் அல்லது சில வகையான புற்றுநோய் போன்ற நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. எலுமிச்சையை நறுக்கி தண்ணீரில் போட்டு அதனுடன் வெள்ளரி துண்டுகள், புதினா இலைகள் சேர்த்து அந்த தண்ணீரைக் குடிக்கலாம்.

இதனால் வளர்சிதைமாற்றம் அதிகரிக்கிறது. எலுமிச்சையை சாலட், சூப், பருப்பு வகைகள், ஆவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சிக்கனுடன் சேர்த்துக் கொள்ளலாம்

Post a Comment

0 Comments