தலப்பா கட்டு மட்டன் பிரியாணி - thalapakati biryani

Time: 75 min
Jion with us
Click to Subscribe

உங்கள் சுவையை தூண்டும் தலப்பா கட்டு மட்டன் பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான தலப்பா கட்டு மட்டன் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையான பொருட்கள்:
 • நெய் – 3 டீஸ்பூன்
 •  டால்டா – 3 டீஸ்பூன்
 •  உப்பு – தேவையான அளவு
 •  எண்ணெய் – 1/4 கப்,
 •  ஏலக்காய் – 2,
 •  தயிர் – 1 கப்,
 •  எலுமிச்சம் பழம் – 1/2 மூடி,
 •  கிராம்பு – 2,
 •  பெரிய வெங்காயம் – 2,
 •  தக்காளி – 2,
 •  பட்டை – சிறிது,
 •  இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
 •  சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ,
 •  மட்டன் – 1/2 கிலோ,
 •  மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி,
செய்முறை :

Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

Step 2.
பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிகொள்ளவும் .

Step 3.
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் , மட்டன் சேர்த்து வதக்கவும் .நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்

Step 4.
தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.அரிசி வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.

Post a Comment

0 Comments