இறால் - காய்கறி சூப் - Prawn Vegetable Soup

Time: 60 min
Jion with us
Click to Subscribe

இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் - காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
  • விருப்பமான காய்கறிகள் - 200 கிராம்
  • இறால் - 100 கிராம்
  • வெள்ளை வெங்காயம் - 1
  • சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
  • சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
  • வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • கார்ன் ஃபிளார் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • வெங்காயத்தாள் - சிறிதளவு
செய்முறை :

இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள்.

கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள்.

வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.

இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவி இறக்குங்கள்.

சத்து நிறைந்த இறால் - காய்கறி சூப் ரெடி.

Post a Comment

0 Comments