பெப்பர் மட்டன் ரோஷ்ட் - pepper mutton roast

Time: 80 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
 • மட்டன் 1/2 கிலோ
 • உப்பு தேவையான அளவு
 • மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி

மசாலாவுக்கு:

 • தேங்காய் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
 • பெரிய வெங்காயம் பெரியது 3
 • பச்சை மிளகாய் 7
 • வரமிளகாய் 2
 • கறிவேவப்பிலை ஒரு கைப்பிடி
 • இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
 • தக்காளி பெரியது 1
 • கரம்மசாலா தூள் 1 மேஜைக்கரண்டி
 • கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி

வறுவல் செய்ய:

 • மிளகு 3 மேஜைக்கரண்டி
 • சோம்பு 1 தேக்கரண்டி
செய்முறை :

1. பிரஷர் குக்கரில் கழுவிய மட்டன் மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அனைக்கவும்.

2. ஒரு வடசட்டியில் மிளகு மற்றும் சோம்பை நன்கு வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை , வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

4. இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. தக்காளி துண்டங்களை சேர்த்து கிண்டவும். உப்பு சேர்க்கவும்.

6. இப்பொழுது வேகவைத்த மட்டனை சேர்க்கவும். நன்கு சுருள வதக்கவும்.

7. கரம் மசாலா பொடியை சேர்த்து, வேகவைத்த தண்ணீரை சிறிது ஊற்றி சுருள கொதிக்க வைத்து ட்ரையாக வறுக்கவும்.

8. இப்பொழுது வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொஞ்சம் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

9. கடைசியாக கொத்தமல்லி இலையை தூவவும்.

Post a Comment

0 Comments