கோதுமை பாதாம் பர்ஃபி

Time: 60 min
Jion with us
Click to Subscribe

கோதுமையில் கால்சியம், இரும்பு மற்றும் நார்சத்து உள்ளது. பாதாமில் புரோட்டின், கால்சியம், நார்சத்து, ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் பல சத்துக்கள் உள்ளது. இது நம் கெட்ட கொழுப்பு சத்தை உடலில் இருந்து குறைத்து நல்ல கொழுப்பு சத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட உடல் ஆரோக்கியத்தை தரும் கோதுமை பாதாம் பர்ஃபி செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:
  • கோதுமை மாவு - 100 கிராம்
  • பாதாம் தூள் – 50 கிராம்
  • சர்க்கரை - 125 கிராம்
  • நெய் - 2 மேசைக்கரண்டி
  • பால் - 1/4 கிண்ணம்
  • ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • ஆப்ப சோடா - 1 சிட்டிகை
செய்முறை :

பாதாம் பருப்பையும், வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து  தோல்நீக்கி, பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். ஓர் அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரைத்த விழுது, சர்க்கரை,வெண்ணெய்,ஏலக்காய்த்தூள்,ஆப்பசோடா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே அடுப்பில் வைத்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும், பாத்திரத்தில் ஒட்டாமல்  வரும் போது, அடுப்பை அணைத்து,  நெய் தடவி தயராக வைத்து உள்ள தட்டில் கொட்ட வேண்டும். பின்னர் வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். பாதாம் வால்நட் பர்ஃபி ரெடி.

குழந்தைகளுக்காக எளிதில் தயாரிக்கக்கூடிய கோதுமை பாதாம் பர்ஃபி குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் செய்து நிறைய பேருக்கும்  கொடுக்கலாம். 

Post a Comment

0 Comments