ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

Time: 50 min
Jion with us
Click to Subscribe

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளியமுறையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
 • அரிசி மாவு - 1 கப் 
 • கடலை மாவு - 1 /2 கப் 
 • பொட்டுக் கடலை மாவு - 1/2 கப் 
 • மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
 • நெய் - 2 மேஜைக்கரண்டி 
 • காயத் தூள் - சிறிது 
 • உப்பு - தேவையான அளவு 
 • சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :

அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு மூன்றையும் தனித் தனியாக சல்லடையில் சலித்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, மிளகாய் தூள், காயத் தூள், நெய், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து வைக்கவும்.

பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் முறுக்கு குழாய் அச்சில் நாடா வில்லையைப்போட்டு, சிறிது சிறிதாக மாவை அதில் சேர்த்து எண்ணெய்யில் பிழியவும். இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். ரிப்பன் பக்கோடா ரெடி.

Post a Comment

1 Comments

 1. Casino Finder (Google Play) Reviews & Demos - Go
  Check Casino https://septcasino.com/review/merit-casino/ Finder gri-go.com (Google ventureberg.com/ Play). A look at some of the best gambling sites febcasino.com in the world. 1등 사이트 They offer a full game library,

  ReplyDelete