ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை கீரையை இப்படி சாப்பிடுங்க

Time: 15 min
Jion with us
Click to Subscribe

பல சத்துக்கள் நிறைந்த கீரை தான் வல்லாரை. இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் எ,வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களும் இதிலுள்ளது. மேலும் இது ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் முக்கிய பங்கு வல்லாரை கீரைக்கு உண்டு.

தற்போது வல்லரையை வைத்து வல்லாரை கீரை சம்பல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
  • வல்லாரை கீரை – 1 கப்
  • சின்ன வெங்காயம் – 10
  • பச்சை மிளகாய் – 1
  • எலுமிச்சம் பழம் – 1 / 2 மூடி
  • மிளகு தூள் – 1 சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை :

வல்லாரை கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வல்லாரை கீரையை போட்டு அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும்.
கடைசியாக அதில் உப்பு, மிளகு தூள் தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

Post a Comment

0 Comments